அதிர்ச்சி! பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்.. திரையுலகில் தொடரும் சோகம்!

 

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்.

1992-ல் வெளியான ‘செந்தமிழ் பாட்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் கசான் கான். அதனைத் தொடர்ந்து, கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், சிந்து நதி, டூயட், வல்லரசு, உள்ளிட்டா பல படங்களில் வில்லனாக தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக  விஜய்யுடன் பத்ரி மற்றும் பிரியமானவளே போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரியமானவளே படத்தில் சிம்ரனுக்கு முறைமாவனாக நடித்திருந்த கசான் கான், 7 டைம்ஸ் 7 டைம்ஸ் என தன்னுடைய ஆம்ஸை உயர்த்தி காமெடி செய்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. இவர் கடைசியாக தமிழில் ‘பட்டைய கிளப்பு’ என்கிற படத்தில் நடித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்தார். அந்த வகையில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான லைலா ஓ லைலா என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி கசான் கான் பிசினஸில் ஆர்வம் செலுத்தியதாக கூறப்படுகிறது. தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. 

allowfullscreen

வில்லன் நடிகர் கசான் கான், திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளார என்.எம் பாதுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த செய்தியை கேட்டவுடன் இவரது ரசிகர்களும், இவருடன் பல படங்களில் சேர்ந்து நடித்த திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.