காமவெறி பிடித்த மிருகங்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும்.. நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்

 

பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும் என்று நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தண்டனை தரக்கோரியும்  நடிகை சனம் ஷெட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தில் பேசிய அவர், “நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட சொல்கிறார்கள். இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என் வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்கிற்கான பதிவுகளை பகிர முடியும். இதனால் சினிமா வாய்ப்பு கூட போனால் போகட்டும். பரவாயில்லை. எது போனாலும் நான் பேசுவேன். 

மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி கொடுப்பார். ஹேமா அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது. பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது.