புதிய அவதாரம் எடுத்த சமந்தா.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

 

மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த அவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, இவர் ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சமந்தா, “ட்ரலாலா பிக்சர்ஸ் புதிய தலைமுறை யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல இது ஒரு தளமாகும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

மேலும், தான் சிறுவயதில் கேட்ட ‘பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்’ என்ற ஆங்கிலப் பாடலில் உள்ள ட்ரலாலா என்ற வார்த்தையில் இருந்து தான் இந்தப் பெயர் வந்ததாக சமந்தா விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமந்தா, எம் டிவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.