சமந்தா - நாக சைதன்யா பிரிவின் காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு சமந்தா அளித்துள்ள பதில் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தனர். அந்த சமயத்தில் சமந்தா மையோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். பல மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு சாகுந்தலம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் படுதோல்விப் படமாக அமைந்து சமந்தாவின் கேரியரை காலி செய்தது.

அதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ என்ற காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்தடுத்து சமந்தா நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால், சினிமாவில்  இருந்து கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக்கொள்ளப் போவதாக தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது உண்டு. அப்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சமந்தா கூறியுள்ள பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. “உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு ரீலாக அமைத்தால் அதில் உங்கள் வாழ்க்கையின் எந்த பகுதியை ப்ளூப்பராக பார்த்து சிரிப்பீர்கள்? அதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்ன?” என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, “என்னுடைய விருப்பம் எது, வெறுப்பு எது என்பதை நான் புரிந்து கொள்ளாதது தான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறன். என்னுடைய பார்ட்னரின் தாக்கம் தான் அதில் அதிகமாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மோசமாக நேரத்தில்கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்ந்த போது தான் நான் தனிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றேன்” என கூறியிருந்தார்.

சமந்தாவின் இந்த பதில் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமந்தாவை நாக சைதன்யா தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது தான் அவர்கள் இருவரின் பிரிவிற்கும் காரணமாக இருக்குமோ, அதை தான் சமந்தா மறைமுகமாக இப்படி வெளிப்படுத்துகிறாரோ என பல கேள்விகள் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளன.