ஜெயிலர் படத்தின் துள்ளலான ‘காவாலா’ பாடல் வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியாகி உள்ளது.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (ஜூலை 6) வெளியாகும் என்று படக்குழு ப்ரோமோ மூலம் அறிவித்திருந்தது. ‘காவாலா’ என்ற இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

<a href=https://youtube.com/embed/RVLNBVK8auM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/RVLNBVK8auM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px none; overflow: hidden;" width="640" height="360" frameborder="0">

இந்நிலையில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் முதல் பாடல் இன்று வெளியானது. துள்ளலான இசையுடன் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைல் ஆக்‌ஷனுடன் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.