ராமோஜி ராவ் காலமானார்.. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மூத்த பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச்.ராமோஜி ராவ் (88) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
சினிமாத்துறையின் மிகப்பெரிய பிலிம் சிட்டியான ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளரானவர் ராமோஜி ராவ். இவர், ஈநாடு நியூஸ் பேப்பர், ஈ டிவி நெட்வொர்க் ஊடகத்துறையிலும் மிகப்பெரும் ஜாம்பவனாக விளங்கினார். கடந்த 2016-ம் ஆண்டு பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, பத்ம விபூஷண் விருது ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி மாரடைப்பு காரணமாக நானக்ராம்குடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராமோஜி ராவ் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.50 மணிக்கு காலமானார். தற்போது, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டு ஐதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராமோஜி ராவ் மறைவுக்கு ஜனாபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரம் முதல்வராக பொறுபேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.