ரித்திக் ரோஷனின் வார் 2 படத்தை முந்தும் ரஜினியின் கூலி!!

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவந்துள்ள கூலி திரைப்படத்திற்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் கூலி படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்து பொதுமக்களிடையே ஒரு தயக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் வார இறுதியில்  தமிழ்நாட்டிலும் கூலி படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

50 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் ரஜினியின் ஆக்‌ஷன் நடிப்பு பொது மக்களிடையே ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரைத்துறையிலேயே 74 வயதிலும் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர், உச்சபட்ச வியாபாரம் ஆகும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

வட மாநிலங்களில் கூலி வெளியான அதே நாளில் ரித்திக் ரோஷன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படமும் வெளியானது. கூலி படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்தன. ஆனால் வார் 2 படம் ரசிகர்களை திருப்தி படுத்தாததால், கூலி படத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது. தியேட்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

ரஜினியின் 50வது ஆண்டு திரைப்படம் என்ற ரீதியிலும் கூலி படத்திற்கு கூடுதல் வரவேற்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.