பிரியங்கா vs மணிமேகலை மோதல்.. சண்டை போட்ட ஆடியோ லீக்!

 

மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட காரசார உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளியாகும். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி, அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் போதே பிரச்சனை தான் என்பது போல, வெங்கடேஷ் பட் வெளியேறினார். இதைத்தொடர்ந்து தற்போது விஜே மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுயமரியாதைதான் முக்கியம்’ என்றும் இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

மணிமேகலை இப்பதிவை வெளியிட்டதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள் கொடி பிடித்திருக்கின்றனர். அதே சமயத்தில் அவர் பிரியங்காவின் பெயரை குறிப்பிடாமலேயே, அது பிரியங்காதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தற்போது, பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் இடையே நடந்த சண்டை குறித்த ஆடியோ வெளியாகி இருக்கிறது. 

இந்த ஆடியோவில் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையேயான காரசார உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. “தேவையில்லாமல் பேசும் வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்..” என்று கூறும் மணிமேகலை, தொடர்ந்து தனக்கு டிஸ்டர்ப் ஆவதாகவும், எதற்கு கத்தி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்றும் பிரியங்காவை கேட்கிறார். அப்படியே இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போகிறது.