பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுபோலவே, அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது.