10 படங்கள் மட்டுமே.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

 

10 படங்கள் எடுத்துவிட்டு சினிமாவில் இருந்து வெளியேறிவிடுவேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-ல் சந்தீப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தில் நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை வணிக ரீதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் இரண்டுபடங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்த லோகேஷ் கனகராஜ்க்கு மூன்றாவது படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மாஸ்டர் படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றிக் காட்டினார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராகவும் முன்னேறினார்.

சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்க வைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தமிழ் சினிமாவில் முதல் 400 கோடி வர்த்தகமான திரைப்படம் என்ற சாதனையை விக்ரம் திரைப்படம் படைக்க காரணமாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.