பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல ஒளிப்பதிவாளுரும் தயாரிப்பாளுருமான மன்னம் சுதாகர் காலமானார். அவருக்கு வயது 62.

பிரபல ஒளிப்பதிவாளர் வி.எஸ்.ஆர்.சுவாமியிடம் உதவியாளராக பணியாற்றியவர் மன்னம் சுதாகர். தொடர்ந்து சிதாரா, வாபல்பாய், புதினில்லா மெட்டினில்லா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். பின்னர் மகாகணபதி பிலிம்ஸ் பேனரை நிறுவிய சுதாகர், தாரகரமுடு, நா மனசிஸ்டாரா, வாலி, சேவைகுடு, ஆக்ரோசம் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

இவர் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தங்குதூரைச் சேர்ந்த பல நடிகர்களை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தினார். சென்னையில் வசித்து வந்த இவர், 3 மாதங்களுக்கு முன்பு குளியலறையில் தவறி விழுந்தார். இதில் சுதாகருக்கு தலையில் பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்டது.

உடனடியாக குடும்பத்தினர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று (டிச. 3) காலமானார். இவருக்கு மனைவி தேவரபள்ளி லக்ஷ்மம்மா, மகன்கள் மன்னம் ஹரீஷ் பாபு, மன்னந்த சதீஷ் பாபு உள்ளனர். இவரது மகள் மன்னம் சுவாதி முன்னதாக இறந்துவிட்டார்.

இவரது மறைவு செய்தி கேட்டு டோலிவுட் மீண்டும் சோகத்தில் மூழ்கியது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.