தமிழ் நடிகர்களுக்கு புது ரூல்ஸ்.. அதிரடியாக அறிவித்த FEFSI அமைப்பு.!

 

தமிழ் படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) அதிரடி ரூல்ஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவை சேர்ந்த பல ஊழியர்கள் பணிபுரிந்து வரும் அமைப்பு தான் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI). தமிழ்நாட்டில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் இந்த FEFSI அமைப்பை சேர்ந்த ஊழியர்கள்தான் பணியாற்றுவார்கள். ஆனால், தற்போது படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் நடப்பது இல்லை, நல்ல லொக்கேஷன் என்ற பெயரில் வெளி நாடுகள், வெளி மாநிலங்களித்தான் பெரும்பாலான படங்கள் எடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டினுள் எடுக்கப்படும் படங்களை கைவிட்டு எண்ணிவிடலாம். இதனால் FEFSI அமைப்பை நம்பி இருக்கும் தொழிலாரகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு FEFSI அமைப்பு தற்போது அதிரடியாக ரூல்ஸ் ஒன்றை அறிவித்துள்ளது. அவர்கள் போட்டிருக்கும் புது ரூல்ஸை பார்த்து அனைவரும் ஷாக்கில் உள்ளனர்.

அந்த புதிய ரூல்ஸில், தமிழ் படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முதல் கண்டீஷன் போட்டுள்ளனர். ஏனென்றால் தமிழ் நடிகர்கள் பலர் சமீப காலமாக தெலுங்கு தயாரிப்பாளர்களின் படத்தில் நடிக்கின்றனர் அவ்வாறு நடிக்கையில் தெலுங்கு நடிகர்கள்தான் அந்த படத்தில் நடிப்பதால் தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த கண்டீஷன் போடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கவேண்டும் இன்றி ரூல்ஸ் போட்டுள்ளனர். அடுத்து, முக்கிய காரணம் இருந்தால் மட்டுமே வெளிநாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ படப்பிடிப்பை நடத்த வேண்டும் அனாவசியமாக வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


நான்காவதாக, குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டியோ அல்லது குறிப்பிட்ட காலத்தை விட அதிகமான நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலோ எழுத்துபூர்வமான விளக்கத்தை தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்று அதிரடியாக FEFSI அமைப்பு கறாராக கண்டீஷன் போட்டுள்ளது. இதனை மீறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என FEFSI அமைப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.