அண்ணன் வராரு.. லியோ படத்தின் டிரெய்லர் ரெடி.. வெளியானது மாஸ் அப்டேட்!

 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் வரும் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது. மேலும் படத்தை தணிக்கைக்குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்தப் படம் வரும் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த நிலையில், படக்குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் (Badass) வெளியாகியது. இதனைத் தொடர்ந்து, புதிதாக ஒரு அப்டேட்டை இன்று படக்குழு வெளியிட்டிருந்தது.