ஹஸ்னா என்பவரை கரம் பிடித்தார் ‘மெட்ரோ’ பட கதாநாயகன் சிரிஷ்.. வைரலாகும் போட்டோ!

 

மெட்ரோ படத்தில் கதாநாயகனாக நடித்த சிரிஷிற்கு ஹஸ்னா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

2016-ல் வெளியான ‘மெட்ரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானாவர் சிரிஷ். இந்தப் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்னை மாநகரத்தில் நடைபெறும் நகைக் கொள்ளை குறித்து அற்புதமாக எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிஸ்தா போன்ற படங்கள் மூலம் மக்களை கவர்ந்த இவர் கிடைக்கும் நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தாலும் சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டியவர். கொரோனா காலத்தில் இவர் மக்களுக்கு தன்னால் முடிந்த நிறைய உதவிகளை செய்து வந்தார்.