மாஸ் வீடியோ.. ‘வேட்டையன்’ படப்பிடிப்புக்காக கன்னியாகுமரி சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.!

 

‘வேட்டையன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக  நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. இந்தப் படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாசில், பாகுபலி புகழ் ரானா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி இப்படத்தின் தலைப்பான ‘வேட்டையன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன் படத்தின் டீசரும் வெளியானது.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளிலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையிலும் நடைபெற்றது. மும்பையில் அமிதாப்பச்சன் - ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வேட்டையன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.