‘கூலி’ படத்தில் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்.. கெட்டப் தரமா இருக்கே!

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இதில் அவருடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. மேலும் அக்டோபர் 10-ம் தேதி வேட்டையன் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கமல் ஹாசனுக்கு விக்ரம் என்ற படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தது போல் கூலி படத்தையும் லோகேஷ் மெகா ஹிட் படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் இடம் பெறுமா என்ற கேள்வி பலரது மனதில் ஓடிக்கொண்டுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் கார்த்தி நடிப்பில் கைதி, கமல்ஹாசன் மற்றும் சூர்யா நடிப்பில் விக்ரம் மற்றும் விஜய் நடிப்பில் லியோ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்கள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 28-ம் தேதி முதல், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.