மாமா தனுஷ் இயக்கத்தில் மருமகன் ஹீரோ! 3வது பாடல் வெளியீடு!!
இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் தனுஷ் இயக்கத்தில் வரவிருக்கும் மூன்றாவது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் தன்னுடைய அக்கா மகன் பவிஷ் ஐ கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார் தனுஷ்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் என ஆரம்பகாலப் படங்களில் தனுஷின் தோற்றத்தை நினைவுபடுத்திகிறார் பவிஷ். இவருடன் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தாயார் விஜயலஷ்மி கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் கோல்டன் ஸ்பாரோ பாடல் முதலில் வெளியானது. பிரியங்கா மோகன் கேமியோ வேடத்தில் நடித்துள்ள இந்தப்பாடலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து தனுஷ் எழுதிய காதல் ஃபெயில் பாடல் வெளியானது. மூன்றாவதாக விவேக் எழுதிய ஏடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.