ஷூட்டிங்கில் மலையாள நடிகர்களுக்கு விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

‘ப்ரோமான்ஸ்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் மற்றும் ‘பிரேமலு’ பட புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜுன் டி.ஜோஸ் இயப1மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன் நடிப்பில் உருவாகி வரும் மலையாள படம் ‘ப்ரோமான்ஸ்’. இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் கொச்சியின் எம்.ஜி.சாலையில் கார் ஓட்டும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 

அப்போது உணவு டெலிவரிக்காக சென்று கொண்டிருந்தவரின் பைக் மீது படக்குழுவினரின் கார் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் உணவு டெலிவரி செய்யும் நபரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே காரில் இருந்த நடிகர்களும், உணவு டெலிவரி நபரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தின்போது காரின் முன்பக்கம் நடிகர் அர்ஜுன் அசோகனும், பின்பக்கம் சங்கீத் பிரதாப்பும் இருந்தனர். இதில் அர்ஜுன் அசோகன் மற்றும்  சங்கீத் பிரதாப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு வந்த போலீசார் நொறுங்கிய கார் உள்ளிட்ட வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும், இந்தச் சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

வேகமாக கார் ஓட்டியதாக கூறி படக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி படப்பிடிப்பு நடத்தியதாகக் கூறி, படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.