பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்... ஷாக்கில் திரையுலகம்!

 

மலையாள பட நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37.

நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிர்மல் பென்னி, யூடியூப் வீடியோக்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றார். 2012-ம் ஆண்டு வெளியான ‘நவகிரகத்து ஸ்வாகதம்’ படத்தின் மூலம் கேரள சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2013-ல் ‘ஆமென்’ படத்தில் கொச்சச்சனாக நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர். ஆஷிக் அபுவின் தா தடி படத்திலும் நிர்மல் நடித்துள்ளார். தாஷா படத்திலும் நிர்மல் ஹீரோவாக நடித்துள்ளார்.

திருச்சூரை சேர்ந்த நிர்மல் பென்னி இன்று (ஆகஸ்ட் 23ம) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நிர்மலின் மரணச் செய்தியை ‘தாஷா’ படத்தின் தயாரிப்பாளர் சஞ்சய் படூர் பகிர்ந்துள்ளார்.

allowfullscreen

நிர்மல் இறப்புச் செய்தி குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “அன்பு நண்பருக்கு மனவேதனையுடன் பிரியாவிடை…. ஆமென் படத்தின் மையக் கதாபாத்திரம் நிர்மல்… இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்….என் அன்பு நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.