ஒரே நேரத்தில் ‘கூலி’ மற்றும் ‘லியோ 2’ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. மாஸ் சம்பவம் லோடிங்!

 

‘கூலி’ மற்றும் ‘லியோ 2’ படங்கள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

தீபாவளியன்று நடிகர் கவின் நடிப்பில் வெளியான படம் பிளடி பெக்கர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கி இருக்கிறார். இதில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில், பிளடி பெக்கர் திரைப்படத்தை படக்குழுவினருடன் திரையரங்கிற்கு சென்று பார்த்த லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து அப்படம் குறித்து பேசினார். அப்போது பத்திரிகையாளர்கள் ‘கூலி’, விஜய் மாநாடு மற்றும் ‘லியோ 2’ குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். 

அதற்கு லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ படப்பிடிப்பு சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 ஷெட்டியூல் இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். 2025-ம் ஆண்டு படம் வெளியாகும். அதன் அதிகாரபூர்வ தேதி விரைவில் சொல்கிறேன்.

விஜய் சார் மாநாடு குறித்து நான் என்ன சொல்வது, வாழ்த்துகள் தான். ‘லியோ 2’ குறித்து விஜய் அண்ணா தான் சொல்ல வேண்டும். அவர் ஒகே சொன்னால் கண்டிப்பாக நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.