15 வருட காதலனை கைப்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
அடுத்தடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் உடன் சாமி 2, விஷாலுடன் சண்டைக்கோழி 2 என டாப் ஹீரோக்களுடன் ரவுண்ட் கட்டினார். சூப்பர் ஸ்டார் ர்ஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்த கீர்த்தி, உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
இதனிடையே கீர்த்தி சுரேஷ் விஜய், அனிருத் உள்ளிட்ட பல நபர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அவ்வப்போது இவரது திருமணம் குறித்த வதந்தி செய்திகளாக வெளியாகி அது வைரலாக பேசப்படும். இருப்பினும் அதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
மாப்பிள்ளையின் பெயர் ஆண்டனி தட்டில். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் சந்தித்து கொண்ட இந்த ஜோடி 15 ஆண்டுகள் பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. கீர்த்தி சுரேஷ், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டனி கொச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
15 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்தாலும் சமீப காலத்தில் இருவரும் தங்கள் உறவை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் தான், இந்த மாதம் திருமண பந்தத்தில் இருவரும் இணையவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.