காதலரை அறிமுகம் செய்த கர்ணன் பட நடிகை.. விரைவில் ஒளிப்பதிவாளரை மணக்கிறார்!

 

கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2016-ல் வெளியான ‘அனுராகா கரிக்கின் வெல்லம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். தொடர்ந்து 2021-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறார். ரகசியமாக காதலித்து வந்த இவர்கள், தற்போது ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை சூசகமாக உறுதி செய்துள்ளனர்.

A post shared by Tobin Thomas (@tobin_thomas7)

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜிஷா விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த டோபின் தாமஸ், ‘1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.