வாழ்க்கையின் நாவலைப் படிப்பது போல் இருந்தது.. ‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் நெகிழ்ச்சி!

 

நடிகர் ரஜினிகாந்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில், நடிகர் விஜய் சில வாரங்களுக்கு முன் பாராட்டினார். தற்பொழுது படத்தை பார்த்த ரஜினிகாந்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

இதுக்குறித்து இயக்குனர் அவரது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது வாழ்க்கையின் நாவலையும், அனுபவத்தை, வாழும் வாழ்க்கை முறையை கோலிவுட்டின் மிகச்சிறந்த மனிதனிடம் இர்ந்து கேட்டு தெரிந்து கொண்டது மிகவும் ஆனந்தம்.