அரசியலுக்கு வருகிறாரா நடிகர் அஜித்..? பரபரக்கும் கோலிவுட்!

 

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஜித்தை சந்தித்த நிலையில், தற்பொழுது மீண்டும் 2 பேர் வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்துகொண்டு இருக்கும் அரசியல்வாதிகளுடன் அஜித் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

1992-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.  

அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார்.

தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி  இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.

படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதால் விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்துடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில், அரசியவாதிகள் இருவருக்கும் நடுவே அஜித் கெத்தாக கூலிங் கிளாஸ் உடன் மாஸாக நிற்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அஜித் அரசியலுக்கு வருகிறாரா? என்று புரளியை கிளப்பி வருகின்றனர்.

அவர், அரசியலுக்கும் வரவே வேண்டாம் விடாமுயற்சி திரைப்பட ஷூட்டிங்கை தொடங்க வேண்டும் என ரசிகர்கள் குமுறி வருகிறார்கள். ஒருவேளை அந்த புகைப்படத்தை வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையுடன் நிற்கும் இருவரும் அஜித்தின் ரசிகர்களாக கூட இருக்கலாம். எது என்னவென்று தெளிவாக தெரியாமல், வதந்தியை பரப்பிவிட வேண்டாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அஜித்தின் மேலாளர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.