என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்தார்.. பிரபல நடிகை மீது கணவர் குற்றச்சாட்டு..!

 

பிரபல நடிகையின் கணவர், மனைவி தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டுவதாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் ட்ராமா குயின் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். கடந்த 2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானார். நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம். இவர் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் ஆதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராக்கி சாவந்த் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆதில் துரானி கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். ஆதிலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய ராக்கி சாவந்த், அவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். தற்போது அவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களுக்குப் முன்பு ஆதில் துரானி ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதில் கான் துரானி தனது முன்னாள் மனைவி ராக்கி சாவந்த் மீது ஆடுகடுகளை பல புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ராக்கி தன்னிடம் பொய் சொன்னதாகவும், ராக்கி சாவத் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக என்னிடம் கூறிவிட்டு தொடர்ந்து ராக்கியும் ரித்தீஷும் தொடர்பில் இருந்தார்கள். நான் அவரை தாக்கியதாக ராக்கி கூறுகிறார். ஆனால் அவர் தான் என்னை பல முறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

என்னுடைய பெயரை கெடுக்கவும், என்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று முத்திரை குத்தவும் அவர் முயற்சி செய்து வருகிறார் என அதில் கான் துரானி தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ள இந்த தகவல் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.