GOAT படத்துக்கு U/A சான்றிதழ்.. பல கெட்ட வார்த்தைகள்.. ஸ்ட்ரிக்ட்டாக கட் செய்த சென்சார் போர்ட்!
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்திற்கு சென்ஸார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாக உள்ள இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்துள்ளார். இதில் அப்பா கதாபாத்திரத்திற்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அந்த டிரெய்லரில் இளம் வயது விஜய், வயதான தோற்றத்தில் விஜய் என டிரெய்லரில் பல சர்ப்ரைஸ்கள் இருந்தன.
கோட் படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்பது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. ஆனால், டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்கள், இசைவெளியீட்டு விழா குறித்து கேட்ட போது, ஏஐ வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், விஜய்யிடம் இதுகுறித்து பேசி இருக்கிறோம் அவர் தேதி கொடுத்த பிறகு இசைவெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று வெங்கட்பிரபு கூறினார்.