ஃபுல் போதை.. என் கணவரும், தனுஷும் ஒரே படுக்கையில்.. புதிய புயலை கிளப்பிய சுசித்ரா!

 

நடிகர் தனுஷ் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் கோலிவுட்டில் மீண்டும் புயலை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது.

2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’ படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ், தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார். மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும், சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் குபேரா படத்திலும் நடிக்கிறார்.

இதற்கிடையே தனுஷை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுவதும் வழக்கமாகியிருக்கிறது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் பலர் அவரது பெயரை இணைத்து பேசுகின்றனர். ஆனால் தனுஷ் அதற்கு அமைதியாகத்தான் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பார்ட்டி புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை பின்னணி பாடகி சுசித்ராதான் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிடுகிறார் என்று அப்போது பேசப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் குறித்து சுசித்ரா அளித்த சமீபத்திய பேட்டியில், “என்னுடைய கணவர் கார்த்திக்கிடம் 12 வருடங்களாக விவாகரத்து கேட்டேன். அவர் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர். அப்படி அவர் சொல்லிக்கொண்டு வெளியே வர அவருக்கு எந்த தைரியமும் இல்லை.

அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக இருக்கும்போது ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரே அறையில் அவரும் தனுஷும் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அந்த ரூமுக்குள் என்ன நடந்தது என்று இரண்டு பேரில் யாராவது ஒருவர் என்னிடம் சொல்லியே ஆக வேண்டும்” என்றார். சுசியின் இந்த பேட்டி கோலிவுட்டில் மீண்டும் புயலை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது.