குவிந்த ரசிகர்கள்.. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஏற்பட்ட காயம்.!

 

கேரளாவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ‘லியோ’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து ‘லியோ’ படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர். இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களால் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து ரசிகர்களை கலைத்தனர்.