பிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை.. அட அதுவும் அவரது பிறந்தநாளில்.. ரசிகர்கள் வாழ்த்து!

 

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என நினைத்த சென்னையைச் சேர்ந்த நடிகை காயத்ரி, அதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டவர். கல்லூரியில் படிக்கும் போது பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்தார்.

இதனிடையே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற ரியாலிட்டி டான்ஸ்  ஷோவில் பங்கேற்று தனது நடன திறமை மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கான சின்னதிரை வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். வசீகரமான முகம், அழகான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்த காயத்ரிக்கு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் என பல சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, மாடலிங், போட்டோஷூட் என பரிணமித்து வருகிறார்.

இவர் டான்ஸர் யுவராஜை தலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் மகன் உள்ளார். மகனுடன் இணைந்து காயத்ரி இன்ஸ்டாவில் போடும் ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். கடந்த ஜூன் 30-ம் தேதி 2வது முறையாக கர்ப்பமடைந்துள்ளதாக தன்னுடைய கணவர் யுவராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை காயத்ரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் காயத்ரி பிறந்த அதே நாளிலே அவருடைய மகள் பிறந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியை யுவராஜ் அனைவருக்கும் சந்தோஷத்தோடு பகிர்ந்து இருக்கிறார். அதற்கும் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.