பிரபல சீரியல் நடிகை விவாகரத்து..? சர்ச்சைக்கு வேற லெவலில் பதில் அளித்த மகாலட்சுமி!

 

ரவீந்தர் - மகாலட்சுமி விவாகரத்து பெறப்போகிறார்கள் என்று சமுக வலைதளத்தில் செய்திகள் பரவிய நிலையில் தற்போது அதற்கு மகாலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழ் மொழியில் ‘நட்புன்னா என்ன தெரியுமா?’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் விமர்சகராக பெரும்பாலானவர்களால் அடையாளம் காணப்பட்டவர். அதிலும் குறிப்பாக நடிகை வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசன்4 தான் இவரை டிரெண்டிங் ஆக்கியது என்றே சொல்ல வேண்டும்.

வனிதா- பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது, நிர்கதியாக விடப்பட்ட பீட்டர் பவுலின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரவீந்திரன் உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளை செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தராக வலம் வரும் ரவீந்திரன் அண்மையில் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாக இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று விவாகரத்து விவாதம் வரை சென்றுவிட்டது. ஒன்று ரவீந்தர் ‘தனது இன்ஸ்டாம் பக்கத்தில் வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என பதிவு போட்டு இருந்தார்.

A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)

இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் பிரிந்து விட்டனரா என்ற கோணத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீந்தர் தனது மனைவி வைக்கும் விஷயத்தை பதிவிட்டுள்ளார். அதில் ‘டேய் புருஷா தனியா இருக்க போட்டோ போடாதன்னு எத்தனை டைம் சொன்னேன். இப்போ எல்லா சோசியல் மீடியாவும் நாம பிரிந்துவிட்டதா சொல்றாங்க. மவனே இன்னொரு வாட்டி இந்த தப்ப பண்ண. ஒரு நாளைக்கு 3 முறை செய்ய உப்மா தான். யூடுயூப் சேனல்கள் பற்றிய என்னுடைய மைண்ட் வாய்ஸ் : இன்னுமாடா நாங்க ட்ரெண்டு, இதுக்கு இல்லையா ஒரு எண்டு’ என்று பதிவிட்டுள்ளார்.