பிரபல இயக்குநர் திடீர் மரணம்.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி!
பிரபல இயக்குநர் சூர்யபிரகாஷ் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
1996-ல் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த ‘அதிபர்’ என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வருசநாடு’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இந்நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில், இயக்குநர் சூர்யபிரகாஷ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் தங்களின் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.
அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனது நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.