பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி...!
Updated: Dec 27, 2023, 03:01 IST
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடி நடிகர் நீல் நந்தா காலமானார். அவருக்கு வயது 32.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெஸ்ட்சைட் காமெடி தியேட்டரில் வாராந்திர நிகழ்ச்சியான ‘அன்னெசசரி ஈவில்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ‘ஜிம்மி கிம்மல்’ என்ற லைவ் மற்றும் காமெடி மூலம் மக்களிடையே பெரும் புகழை பெற்றார்.
இந்த நிலையில் நீல் நந்தா திடீரென இறந்ததாக அவரது மேலாளர் கிரெக் வெயிஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘நீல் நந்தாவின் மறைவால் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அற்புதமான நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி, சிறந்த மனிதராகவும் விளங்கினார். உலகத்தை அவருக்கு முன்னால் வைத்திருந்தார்’ என்று பதிவிட்டுள்ளார்.