சிறையில் A-கிளாஸ் கேட்ட பிரபல நடிகை.. வேற லெவல் தீர்ப்பு கொடுத்த நீதிபதி!

 

கணவர் ரவீந்தருக்கு சிறையில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்க வேண்டும் என மகாலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2013-ல் வெளியான ‘சுட்ட கதை’ படத்தின் மூலம் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ரவீந்தர் சந்திரசேகர். தொர்ந்து, கொலை நோக்கு பார்வை, நளனும் நந்தினியும், நட்புன்னா என்ன தெரியுமா?, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். 

இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் விமர்சகராக பெரும்பாலானவர்களால் அடையாளம் காணப்பட்டவர். அதிலும் குறிப்பாக நடிகை வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசன்4 தான் இவரை டிரெண்டிங் ஆக்கியது என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில், கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார்.

மகாலட்சுமி - ரவீந்தர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பேசப்படுகிறது. மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடியது.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரவீந்தருக்கு சிறையில் விஐபிக்களுக்கு வழங்கப்படும் A க்ளாஸ் வழங்கவேண்டும் என மகாலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இன்னொரு மனுவும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அந்த இரண்டு மனுக்களையுமே நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது.