பிரபல நடிகை கர்ப்பம்.. ரசிகர்களுக்கு இன்ப செய்தி கொடுத்த நடிகை.! 

 

பிரபல நடிகை இலியானா தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன் என இன்று அறிவித்து உள்ளார்.

2006-ல் வெளியான ‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இலியானா தனது நோய்க்கான காரணங்களை கூறாத நிலையில், கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், விரைவில், என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டுள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.