பிரபல நடிகரின் தாயார் காலமானார்... முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

நடிகர் வாசு விக்ரமின் தாயார் லலிதாம்பாள் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

1988-ம் ஆண்டு ‘பசி’ இயக்குநர் துரை இயக்கிய ‘பாலைவனத்து பட்டாம்பூச்சி’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சு விரட்டு, சிவாஜி, எங்கள் ஆசான் உள்ளிட்ட சுமார் 50-திற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடியனாகவும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் மறைந்த நடிகர்களான எம்.ஆர்.ராதா மற்றும் இவரின் தந்தை எம்.ஆர். வாசுவின் நடிப்பை பார்க்க முடியும். மேலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான சித்தி, செல்வி, செல்லமே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. இவரின் உடல், கோடம்பாக்கம் ஆ.என்.நம்பியார் தெருவிலுள்ள வாசுவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை மாலை 2 மணியாளத்தில் ஏவி.எம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.