பிரபல நடிகர் பிந்து நந்தா மரணம்... கல்லீரல் தானம் கிடைத்தும் உயிரிழந்த சோகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

பிரபல ஒடியா நடிகர் பிந்து நந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 45.

தூர்தர்ஷன் தொடர் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பிந்து நந்தா. 1996-ல் வெளியான ‘கோயிலி’ படத்தின் மூலம் ஒடியா திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 'ராம் லக்ஷ்மண், 'டு அக்கி மோ ஐனா', 'ராங் நம்பர்', 'பஹுதிபே மோ ஜகா பலியா', 'ஓ மை லவ்', ஐ லவ் யூ', 'பிரேம ரோகி' மற்றும் 'ஜெய் ஜெகநாத்' போன்ற படங்கள் நடித்துள்ளார். 'ராங் நம்பர்' படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றார்.

கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் பிந்து நந்தா, கடந்த மாதம் 1-ம் தேதி புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக புது தில்லியின் கல்லீரல் மற்றும் பிலியரி சயின்சஸ் நிறுவனத்திற்கு (ILBS) மாற்றப்பட்டார்.

ஆனால் அவருக்கு உடனடியாக உறுப்பு கிடைக்காமல் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் நடிகர் பிந்து நந்தா அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பிந்து நந்தாவிற்கு அவரது உறவினர் கல்லீரல் தானம் அளிக்க முன்வந்தார். இதனையடுத்து அவருக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு 11.25 மணிக்கு உயிரிழந்திருக்கிறார்.

அவருக்கு இரத்தம் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பலனின்றி பிந்து நந்தா உயரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், சத்தீஸ்கர் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாநிலத்தின் மூத்த தலைவர்கள் பலர் ஒலிவுட் நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.