இந்திய சினிமா வராலாற்றில் முதல் முறை..  ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் திரிஷயம்

 

‘திரிஷ்யம்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. இந்தப் படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மட்டுமல்லாது சீன மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. மேலும் சில வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை திரிஷ்யம் 2 என்கிற பெயரில் இயக்கி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றி படமாக்கினார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

இந்நிலையில் ‘திரிஷ்யம்’ மற்றும் ‘திரிஷ்யம் 2’ படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. திரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது.

இதற்காக திரிஷ்யம் பட உரிமையை வைத்திருக்கும் மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸிடம் இருந்து சர்வதேச ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. ஒரு இந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். அந்தவகையில் திரிஷ்யம் சரித்திரம் படைத்துள்ளது.

ஏற்கனவே, கொரியன் மொழியில் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 10 நாடுகளின் மொழிகளில் திரிஷ்யம் படங்களை ரீமேக் செய்ய பனோரமா நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.

பனோரமா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கத் பதக் கூறுகையில், “திரிஷயத்தின் புத்திசாலித்தனமான கதைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் கொண்டாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கொரிய மொழியைத் தொடர்ந்து அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 10 நாடுகளில் 'திரிஷயம்' படத்தைத் தயாரிப்பதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.