விவாகரத்து... குத்தாட்டம் போட்ட பிரபல பாலிவுட் நடிகை.. வைரல் வீடியோ

 

பாலிவுட் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், விவாகரத்து கிடைத்த குஷியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் ட்ராமா குயின் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். கடந்த 2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானார். நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம். இவர் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இவர் கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் ஆதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராக்கி சாவந்த் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ஆதில் துரானி கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். ஆதிலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய ராக்கி சாவந்த், அவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். தற்போது அவருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

A post shared by Rakhi sawant faatima (@rakhi_sawant_faatima)

விவாகரத்து கிடைத்த குஷியில், நடிகை ராக்கி சாவந்த் பிரேக் அப் பார்ட்டி ஒன்றை கொண்டாடி உள்ளார். அதில் விவாரத்து கிடைத்ததால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி குத்தாட்டமும் போட்டுள்ளார். அவர் பிரேக் அப் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.