தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’.. வெளியானது சூப்பர் அப்டேட்!

 

தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் 52-வது படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து, ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அண்மையில் வெளியான அவரது 50-வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே இயக்கினார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது தனது 52-வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை டான் பிசர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷின் வுண்டர் பால் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு ‘இட்லி கடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. படத்தில் தனுஷுடன் இணைந்து, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.