சில்க் ஸ்மிதாவின் மரணம்.. பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜா கூறிய அதிர்ச்சி தகவல்

 

நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

1980-ல் வெளியான ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இந்தப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க இயக்குனர் விணு சக்ரவர்த்தி வாய்ப்பு வழங்கினார். பின்னர் தனது பெயரை ஸ்மிதா என்று மாற்றிய அவர் தனது முதல் கேரக்டரான சில்க் என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார். முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

அன்றைய தேதியில் தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினார். இதன்காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா. பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களே வழங்கப்பட்டாலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது சில்க் ஸ்மிதாவின் கனவு.

மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் நடிப்பில் துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா. பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார்.

ஆனால் சில்கின் தனிப்பட்ட வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. ஆம்.. புகழின் உச்சியில் இருந்த ஸ்லிக் ஸ்மிதா 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சில்க் தற்கொலை செய்யும் ஆளே கிடையாது அவரை கொலை செய்திருக்கலாம் என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். சில்க் ஸ்மிதா மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும், லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். 

இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்படும் பிரபல நடன அமைப்பாளர் புலியூர் சரோஜா சில்க் குறித்து சொன்ன கருத்துகள் மீண்டும் வைரலாகி வருகின்றன. பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த புலியூர் சரோஜா, ஒருமுறை சில்க் தன்னிடம் வந்து, நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் எண்றும், கல்யாணத்தை நீங்கள் தான் முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்த ஒரு வாரத்திலேயே சில்க் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர், “சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி தெரிந்த உடனே, நான் பிணம் மாதிரி ஆகிவிட்டேன்.. உடனடியாக அவரின் உடலை பார்க்க சென்றோம்.. எங்களால் அவளின் உடலை பார்க்கவே முடியவில்லை.. அவ்வளவு கஷ்டமாக இருந்தது என்றும் கண்னீருடன் கூறினார்.

மேலும் “அந்த இடத்தில் ஒரு 5 பேர் கூட இல்லை. ஆடை இல்லாமல் மோசமான நிலையில் சில்க்கின் உடலை பார்த்தேன்.. அவர் இறந்த பின்பும் அங்கேயும் சில்கை ஏதோ செய்துவிட்டார்கள். சில்க் ஸ்மிதா கண்டிப்பா தற்கொலை செய்திருக்க மாட்டாள்..  அவள் இறந்த பின்பு 10 நாள் தன்னால் தூங்க முடியவில்லை.. அவளை யார் எது செய்திருந்தாலும் அவர்கள் நல்லாவே இருக்கமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.