‘சியான் 62’ படத்தில் இணைந்த எஸ.ஜே.சூர்யா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

 

நடிகர் விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது நடிப்பில் ‘சியான் 62’ படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில் சித்தா படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் தன்னுடைய சியான் 62 படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவரும் இந்தப் படத்தை எச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியான நிலையில், படத்தில் கிராமத்து கெட்டப்பில் விக்ரமை பார்க்க முடிந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சியான் 62-வது படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


முன்னதாக சியான் 62 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் விக்ரம் கிராமத்து லுக்கில் காணப்பட்ட நிலையில், நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் கிராமத்து கேரக்டரில் நடிக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசையும் மிகப்பெரிய வலிமையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.