3 ஆண்டுகளுக்கு சினிமாவுக்கு பிரேக்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு..? வெளியான பரபரப தகவல்!

 

வெங்கட் பிரபு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

கடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அறிவுரைகளை கொடுத்து அனுப்பினார். எனவே, விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றாற் போலவே, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

அணமையில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்து நடிகர் விஜய் பரிசு வழங்கினார். சுமார் 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சளிக்காமல் நின்று மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

2026-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கொண்டு விஜய் இந்த முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியும் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இப்போது கையில் உள்ள படங்களை அவர் விரைவில் முடிப்பார்.

தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் வெங்கட்பிரபு உடனான தனது 68-வது படத்திற்கு பின் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 மே மாதத்திற்குள் வெங்கட்பிரபு உடனான படத்தை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.