பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1969-ல் வெளியான சாட்ஹிந்துஸ்தானி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அமிதாப் பச்சன். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரது நடிப்பில் மெகா பட்ஜெட் படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தெலுங்கு நடிகர் பிரபாசின் கல்கி 2898 AD படத்தில் அமிதாப் பச்சன் நடித்து உள்ளார். இந்த படம் வரும் மே 9-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன் நடத்து வருகிறார்.

அவருக்கு இருதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காலில் ஏற்பட்ட ரத்த உறைதல் காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் குஜ்ராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார்.

இதனிடையே இந்திய ஸ்டீரிட் கிரிக்கெட் லீக் தொடரில் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனின் மும்பை அணி, சென்னை சிங்கம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் மற்றும் மற்ற அணி நிர்வாகிகள் மற்றும் வீர்ரகளுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், தான் திடீரென அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 81 வயதான அமிதாப் பச்சன் பாலிவுட்டில் தொடர்ந்து வரிசை கட்டி நடித்து வருகிறார்.