நீல நிற மிடி.. வைரலாகும் ஆலியா பட்டின் 1.5 லட்சம் டிரஸ்.. விலையை கேட்டா தலையே சுத்துதே!

 

அனிமல் படத்தின் வெற்றி விழாவில் ஆலியா பட் அணிந்திருந்த ஆடையின் விலை ஒன்றரை லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. ரன்பீருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இருந்ததாக விமர்சனம் எழுந்த போதும் படம் 900 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் மும்பையில் நேற்று பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகை ஆலியா பட் அணிந்து வந்த விலை உயர்ந்த உடை தற்போது பேசுபொருளாகி உள்ளது.

தந்தையின் மீது அதிக அன்பு வைத்திருக்கும் கதாநாயகன் தந்தையாகல் நிராகரிக்கப்படுகிறார். ஆனால், அதே தந்தையின் உயிருக்கு ஆபத்து வரும்போது கதாநாயகன் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே அனிமல் படத்தின் கதை. உணர்ச்சிவசமான ஒரு கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. டிசம்பர் 1-ம் தேதி வெளியான இப்படத்தில் பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அனுராக் கஷ்யப், ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்கள் அனிமல் படத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆனால், இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதே நேரம், அனிமல் படத்தை புகழ்ந்த நடிகை த்ரிஷா, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனத்தை அடுத்து அந்த பதிவை டெலிட் செய்தார். மேலும், அனிமல் படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் பேசினார். இப்படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டப்படுகிறது என்று அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்தார்.

இப்படி அனிமல் படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வந்த போதும் இத்திரைப்படம் ரூ 900 கோடிக்கும் மேல் வசூலை ரன்பீர் கபூர் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக மாறி உள்ளது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று மும்பை ஜூஹூவில் ஆடம்பரமான வெற்றி விழா நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு எவர்கிரீன் நடிகர் அனில் கபூரும், உபேந்திர லிமாயே, தயாரிப்பாளர் பூஷன் குமார், நடிகர் பிரேம் சோப்ரா,கரன் ஜோகர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், தமன்னா ஆகியோர் கலந்து கொண்டார். மேலும் இதில் ரன்பீர் கபூர், அவரது மனைவி ஆலியா பட், அலியாவின் தந்தை மகேஷ் பட் மற்றும் ரன்பீரின் தாய் நீது கபூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு நடிகை ஆலியா பட் நீல நிற மிடி உடையை அணிந்திருந்தார். மேலும் அதற்கு மேட்சாக நெக்லைன், மார்பளவு பகுதிக்கு கீழே ஒரு கட், பின்புறத்தில் ஒரு பிளவு ஆகியவை ஆலியாவின் தோற்றத்திற்கு கூடுதல் அழகை சேர்த்தது. மேலும், ஹை ஹீல்ஸுடன் தனது தோற்றத்தை மேலும் அழகாக்கும் வகையில் தலைமுடியை பின்புறத்தில் கட்டி வைத்திருந்தார். இதற்கு எடுப்பாக இளஞ்சிவப்பு கிளாம் மேக்கப் போட்டு ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் தன் பக்கம் திருப்பினார். அந்த விழாவிற்கு ஆலியா அணிந்து வந்த நீல நிற மிடியின் விலை மட்டும் ரூ.1.51 லட்சம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.