மோசடியில் ரூ.17 லட்சம் இழந்த பிக்பாஸ் பிரபலம்.. நடந்தது என்ன?

 

பெடக்ஸ் கொரியர் மோசடியில் ரூ.17.5 லட்சத்தை இழந்துள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகை சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் 8வது சீசனில் 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்த பிறகு வீடு சற்று சுறுசுறுப்பு அடைந்துள்ளது. நான்கு வாரங்களை நிறைவு செய்த போட்டியாளர்களுடன் பழகுவதற்கு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பெரிதும் சிரமப்படவில்லை. முந்தைய வாரங்களில் ஆண் போட்டியாளர்களில் கவனம் பெற்ற முத்துக்குமரன் இந்த வாரம் அமைதியாவிட்டார். டாஸ்க்கை தவிர்த்து கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்களை கூறி அழுதனர். 

இதில் போட்டியாளர் சவுண்ட் சௌந்தர்யா ஒரே காலில் 17 லட்சம் ரூபாயை இழந்ததாக கண்ணீர் விட்டார். இதை கண்டு பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். முன்னாள் போட்டியாளர் சனம் ஷெட்டி, சௌந்தர்யா பிக்பாஸ் போட்டியின் பிஆர் வேலைக்காக 17 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்தாரா என சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் போட்டியில் என்னுடைய கடந்து வந்த பாதையை கூறுவேத ஒரு கனவு என்று சொல்லலாம்; சௌந்தர்யா யார் என்று சொல்வதற்காக பல நாட்கள் காத்திருந்தேன். என்னுடைய குரலை வைத்து பள்ளியில் கிண்டல் அடிப்பார்கள். என்னுடைய குரலை ஒரு குறையாக பார்த்தனர். மனம் விட்டு பழக முடியாத நபர் போல தான் இருப்பேன்; வகுப்பறையில் என்னை வாசிக்க சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். படிக்க தெரியாதது போல் நடித்தால் உட்கார வைத்து விடுவார்கள். பேசுவதற்கே பயம் வரும், தன்னம்பிக்கை இருந்ததில்லை; கல்லூரியிலும் கார்னர் செய்யப்பட்டேன் என வருந்தினார் சவுந்தர்யா.

கமல் சாருடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் வேடத்தில் நடித்தேன். போலீஸ் கதாபாத்திரம் என சொன்னார்கள். ஆனால் கூட்டத்தில் ஒருவராக நடிக்க வைத்ததை ஏமாற்றமாக உணர்ந்தேன். வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு மாடலிங் செய்துள்ளேன், குறும்படம் நடித்துள்ளேன். யாராவது ஒரு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் என்னை தூக்கிவிடமாட்டார்களா என ஏங்கியுள்ளேன். 

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகே என்னை நானே தூக்கிவிட வேண்டும் என கற்றுக்கொண்டேன் என்றார் சவுண்ட் சௌந்தர்யா. அதிர்ச்சி தகவலாக பிக்பாஸ் வீட்டிற்கு வரும் ஒரு மாதத்திற்கு முன்பாக 17 லட்சம் ரூபாயை இழந்ததாக கூறினார். இதனால் தனது 8 வருட சேமிப்பு அனைத்தையும் இழந்துவிட்டதாக அழுது புலம்பினார் சௌந்தர்யா. ஸ்கேம் கால் செய்து தன்னை மிரட்டி 17 லட்சம் ரூபாயை பெற்றுவிட்டதாகவும் கூறினார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன் இவ்வளவு பணத்தை இழந்தாரா என்றால் பி.ஆர் வேலைக்காக பேசி அதில் தெரியாமல் மாட்டிக் கொண்டாரா எனவும் சௌந்தர்யா தான் அந்த ஸ்கேம் எனவும் சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். ஜாக்குலிடனிடம் 17 லட்சம் ரூபாய் இழந்தது குறித்து பேசும் போது தானே அந்த பணத்தை அனுப்பியதாக உளறி மாட்டிக் கொண்டார். சனம் ஷெட்டியின் கேள்விக்கு புகார் அளித்த மனுவையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். எனவே திட்டமிட்டு பிக்பாஸ் வீட்டில் இந்த விஷயத்தை பேசினாரா என்ற கேள்வியும் ரசிகர்களின் மனதில் எழுகிறது.