பிக் பாஸ் நடிகை மருத்துவமனையில் அனுமதி.. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பாலிவுட் சினிமாவில் ட்ராமா குயின் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். கடந்த 2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானார். நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம். இவர் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு அதில்கான் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், அதில்கானுடனும் ராக்கி சாவந்த் பிரச்சனை செய்து சண்டை போட்டது பரபரப்பை கிளப்பிய நிலையில், திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ஷாக்கை கிளப்பியது.
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருப்பையில் தற்போது டியூமர் இருப்பதாக அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
கருப்பை கட்டி என மருத்துவர்கள் சொன்னாலும், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அதுதொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது முன்னாள் மனைவி ராக்கி சாவந்த் குணமடைய வேண்டும் என ரசிகர்களை பிரார்த்தனை செய்ய ரித்தேஷ் சிங் கூறியுள்ளார். அதில் கான் இதுதொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.