‘36 வயதினிலே’ படத்திற்காக சிறந்த நடிகை.. தமிழ்நாடு அரசு விருதை பெற்றார் நடிகை ஜோதிகா!

 

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகை ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மீண்டும் சில வருடங்களாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை, டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருதினை, ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்திற்காக பெற்றார். இயக்குனர் ரோஷன் அண்ட்ரிவ்ஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை, 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான, இப்படம் ஜோதிகாவின் ரீ என்ட்ரி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக ஏற்கனவே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் சார் விருது,  உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்ற ஜோதிகா... தற்போது தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

வீட்டில் இருக்கும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்கிற ஊக்கத்தை கொடுக்கும் விதமாக, இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடித்திருந்தார். மேலும் அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், கலைராணி, போஸ் வெங்கட் , இளவரசு, எம்எஸ் பாஸ்கர், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.