காது கூசும் கெட்ட வார்த்தைகள்.. நடுத்தெருவில் ஆக்ரோஷமாக பூசாரியை Beep-ல் திட்டிய ஜிபி முத்து!

 

பட்டப்பகலில் நடுத்தெருவுக்கு வந்த ஜிபி முத்து கோவில் பூசாரியை காதே கூசும் வார்த்தைகளால் ஆக்ரோஷமாக திட்டி சண்டையிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளமான டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ஜிபி முத்து. டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட தொடங்கினார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளதால் இன்ஸ்டாகிராமிலும் ஏராளமான பாலோவர்ஸ்களை சம்பாதித்தார். இப்படி வலைதளங்களில் பிரபலமான ஜிபி முத்து விஜய் டிவியில் நடக்கும் ‛பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு சன்டிவியில் நடக்கும் ‛டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியில் ஜிபிமுத்து பங்கேற்றார். திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தான் ஜிபி முத்து நடுரோட்டில் பூசாரியுடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதாவது ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். உடன்குடி அருகே வெங்கடாசலபுரத்தில் ஜிபி முத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த கிராமத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இது ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தூத்துக்குடியை சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். கோவில் கொடை விழா தவிர தமிழ் மாதத்தின் முதல் நாளில் இந்த கோவிலில் பூஜைகள் நடக்கும். இதில் ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்பது வழக்கம். அதேபோல் பூஜை செய்யும் மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் பிறந்தது. புரட்டாசி முதல் தேதியான அன்று பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வந்து பூஜை செய்தனர். அப்போது அங்கு வந்த ஜிபி முத்து கோவிலுக்கு பூஜை வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.