ஐநா தலைமையகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்.. வைரலாகும் புகைப்படம்!

 
ARR

ஐ.நா.வின் தலைமையகத்துக்கு வெளியே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1992-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதனை தொடர்ந்து தமிழ் சினமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தற்போது அயலான், கோப்ரா, இரவினில் நிழல் உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார்.

ARR

இசைதுறையில் பல்வேறு சாதனைகளையும் உறிய விருதுகளையும் பெற்றுள்ள அவர் இன்னும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை வியக்கவைத்து வருகிறார். தென் இந்திய மொழிகள், வடமொழிகளையும் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்கள் வரை ஏ.ஆர்.ரகுமானின் இசை பரவி இருக்கிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு வெளியே தான் நிற்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ஆனால், எதற்காக ஐ.நா. அவைக்கு சென்றார் என்ற தகவலை அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிரவில்லை.