‘உன்னோடு நான் ஒன்னாவனா’... சிறகடிக்க ஆசை சீரியல் முத்துக்கு பொன்னி சீரியல் நடிகையுடன் எங்கேஜ்மென்ட்!

 

சின்னத்திரை நடிகர்கள் வெற்றி வசந்த்துக்கும், வைஷ்ணவிக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது.

விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் இன்று தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு விரைவில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்து சொல்லப் போறேன் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

இதனால் இவர் புது படத்தில் கமிட்டாகி இருக்கிறாரா? அல்லது திருமணம் செய்யப் போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அதற்கு அவர் பதில் சொல்லாமல் இருந்த நிலையில் இன்று தன்னுடைய காதலியை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் பொன்னி கேரக்டரில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி தான்.

வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தில் சைடு கேரக்டரில் நடித்திருந்தார் அவருக்கு ஒன்று சீரியல் மூலமாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வைஷ்ணவியும் விஜய் வசந்த்தும் காதலித்து வருவதாகவும் இந்த வாரத்திற்குள் எங்களுடைய எங்கேஜ்மென்ட் நடைபெறுகிறது, விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் க்யூட்டான போட்டோ சூட் வீடியோ ஒன்றும் எடுத்து இருக்கின்றனர். இருவரும் வெள்ளை நிறத்தில் இருக்கும் ரீல்ஸ் வீடியோயை பகிர்ந்திருக்கும் நிலையில் இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.